வணக்கம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், சங்கரண்டாம்பாளையம் அருள்மிகு ஶ்ரீ இரத்தினமூர்த்தி ஆண்டவர் ஆலயத்தின் பாலாலயம் மற்றும் திருக்கோவிலின் திருப்பணி வேலைகள் தொடக்கம் நமது தெய்வத்திரு 34வது பட்டக்காரர் ஶ்ரீமான் S.K குமார ரத்தின வேணாவுடையார் அவர்கள் நல்லாசியுடன் இளையபட்டக்காரர் உயர்திரு S.K கணேஷ் அவர்கள் முன்னிலையில், நமது 35வது பட்டக்காரர் ஸ்ரீமான் S.K பாலசுப்ரமணிய பெரியண்ணவேணாவுடையார் அவர்கள் தலைமையில், கொற்றை ஆதினம் குலகுரு அவர்கள் ஆசியுடன் சிறப்பாக தை திங்கள் 9ஆம் நாள் (ஜனவரி 22 2018) மாலை 5 மணிக்கு மேல் ஆண்டவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பாக நடந்தது. திருப்பணி வேலைகளில் நமது கோவிலை சார்ந்தோர் பங்கேற்று இறையருள் பெறவும்.
