கொங்கு வேணாடர்

பெயர் காரணம்

தூது விலாசம் ஆற்றுப் படை போன்ற சிற்றிலக்கியங்கள், பெரும்பாலும் வரலாற்றுச் சார்புடையவை. பாட்டுடைத் தலைவனைப் பாடும் முகத்தான், நூலாசிரியர்கள், நாட்டைப் பற்றியும், நாட்டில் வாழும் மக்களைப் பற்றியும் கவிதைகள் இயற்றப்படுவது இயல்பு. இத்தகைய நூல்களைப் பாட்டுடைத் தலைவராகப் பெற்றவர்கள் கொங்கு வேளிர். வேணாடுடையார்கள் கொங்கு தென்கரை நாட்டுப் பட்டக்காரர்கள்.

வேள்+நாடர்-வேணாடர்வேள்-வேளாளர் நாடர்-நாட்டின் முதல்வர் கொங்குவேள் நாடர்-கொங்கு வேணாடர் என மருவிற்று என்றும் கூறலாம்.

 
வரலாறு

பொன்னூஞ்சல்

கொங்கு மண்டலத்தில் ஒரு சமுதாய மக்களின்உறவுகளை பல நூறு ஆண்டுகளாக கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறது ஒரு ஊஞ்சல். மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு , பெண்மையை போற்ற வேண்டும் என்பதற்காகவே வழங்கப்பட்டதாக சொல் லப்படும் இந்த ஊஞ்சல் , அனைவரின் வணக்கத் திற்கும் உரியதாக இருப்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறத.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது சங்கரண்டாம்பாளையம் கிராமம் . இங்கு மார்கழி மாதம் திருவாதிரை நாளில் பெரிய குலக் கன் னியர்க்கு பொன் ஊஞ்சல் திருக்கல்யாணச் சீர் செய்யப்படுகிறது . இந்த நிகழ்ச்சி பல நூறு ஆண்டு களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . கொங்கு வேளாளர்களில் பெரியன் குலத்தினர் மட்டுமே கடைபிடித்து வருகின்றனர்

play-button
CLICK HERE TO WATCH OUR PROMO

பொன்னூஞ்சல்

படத் தொகுப்புகள்

வரவிருக்கும் நிகழ்வுகள்